search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆம்பூரில் ஆள்மாறாட்டத்தில் பெண் கொலை 20 மணி நேரம் காத்திருந்து தவறுதலாக கத்தியால் குத்திய வியாபாரி

    ஆம்பூரில் ஆள்மாறாட்டத்தில் பெண் கொலை 20 மணி நேரம் காத்திருந்து தவறுதலாக கத்தியால் குத்தியதாக வியாபாரி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). மாட்டு வியாபாரி. இவரது மனைவி ரேணுகாம்பாள். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் தனலட்சுமி ( 36). இவரது கணவர் சுரேஷ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 

    இதனால் தனலட்சுமி தனது இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வழியின்றி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து விட்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தேவேந்திரன் வியாபார விஷயமாக ஆம்பூருக்கு அடிக்கடி வந்த போது தனலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் வசித்து வந்தனர். 

    இதற்கிடையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது இதனால் தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து விட்டார். தேவேந்திரன் மனைவியை அழைத்து வர ஆம்பூருக்கு வந்தார். அங்கு அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தேவேந்திரன் நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் தனலட்மியை கொலை செய்ய திட்டமிட்டார். 

    அங்கு வந்த தேவேந்திரன் தனது மனைவி என நினைத்து கவுசர் என்ற இளம்பெண்ணை கழுத்தில் குத்தினார். பின்னர் அவர் தனது மனைவி இல்லை என்பதை உணர்ந்தார். ஆனால் இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார்.

    சத்தம் கேட்டு தனலட்சுமி எழுந்து பார்த்தார் ‌. தேவேந்திரன் தனலட்சுமி யை குத்தி விட்டு ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் தேவேந்திரன் கூறியதாவது.

    தனலட்சுமிக்கு அடிக்கடி போன் வரும் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பார். கடந்த மாதம் தனலட்சுமிக்கு போன் வந்தது. உடனே அவள் ஆம்பூருக்கு வந்து விட்டார். நான் பலமுறை அழைத்தும் வரவில்லை. 

    நேற்று முன்தினம் காலை ஆம்பூருக்கு வந்த அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். வர மறுத்து விட்டார். என்னுடன் வாழ மறுத்த தனலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டேன். அவர் இரவு நேரத்தில் தூங்கும் இடம் எனக்கு தெரிந்தது. 

    அதனால் இரவு வரை காத்திருந்து அங்கு சென்றேன். அங்கு போர்வையை முகத்தில் மூடிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த கவுசரை எனது மனைவி என தவறாக நினைத்து கொலை செய்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×