என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மேல்நிலை நீர்த்ேதக்கதொட்டி
  X
  மேல்நிலை நீர்த்ேதக்கதொட்டி

  சேதமடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேதமடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சீரமைக்க ெபாது மக்கள் கோரிக்கை
  கீழக்கரை

  ராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் நாள் ஒன்றுக்கு 10லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

  கீழக்கரை வடக்குத் தெருவில் உள்ள மேல்நிலை  குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த தொட்டியின் கான்கிரீட் சிமெண்டுகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.அந்த பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் குடியிருப்பதால் அவர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். 

  மேலும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மேலே செல்ல முடியாதவாறு படிகள் உடைந்து விட்டன. குடிநீர் தொட்டி பராமரிப்பாளர் ஆபத்தான முறையில் மேலே சென்று கண்காணித்து வருவதாக தெரிவித்தார். 

  குடிநீர் தொட்டியின் மேல் பகுதி கான்கிரீட் உடைந்து தண்ணீருக்குள் விழும் நிலையில் உள்ளதால் மேலே சென்று குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 

  மேல்நிலை  குடிநீர்  தொட்டி கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் அதனை அகற்றி புதிய குடிநீர் உயர் நிலைத் தொட்டி அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  Next Story
  ×