என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முகாமை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
  X
  முகாமை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

  திசையன்விளையில் இலவச மருத்துவ முகாம்- பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திசையன்விளையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
  திசையன்விளை:

  குலசேகரம் முகாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, துரைப்பாண்டி சரோஜா மருத்துவ தொண்டு அறக்கட்டளை சார்பில் திசையன்விளையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

  திசையன்விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி முருகானந்தம் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

   வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பொன்ராஜ் வரவேற்று பேசினார்.

  முகாமிற்கு வந்த நோயாளிகள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முகாம்பிகை மருத்துவ கல்லூரி மக்கள்தொடர்பு அலுவலர் ஜெகதீஷ் செய்திருந்தார்.
  Next Story
  ×