என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர்.
  X
  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர்.

  சிறப்பு ரெயில்கள் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வலியுறுத்தி ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சங்கரன்கோவிலில் சிறப்பு ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  சங்கரன்கோவில்:

  நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் நெல்லையிலிருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் ஆகிய இரு சிறப்பு ரெயில்கள் சங்கரன்கோவில், கடையநல்லூர், பாம்புக் கோவில் சந்தை ெரயில் நிலையங்களில் நின்றுசெல்ல வேண்டும்.

  இந்த வழித்தடத்தில் நெல்லை - தென்காசி - விருதுநகர் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும். பெங்களூரு, மும்பைக்கு வாராந்திர ரெயில்கள் இயக்கிட வேண்டும். கரிவலம் வந்த நல்லூர் ரெயில் நிலையத்தை சீரமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கையினை வலியுறுத்தி சங்கரன்கோவில் ரெயில் நிலையம் முன்பு நேற்று மாலை ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராசேந்திரன் தலைமை தாங்கினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் சுப்பா ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் தங்கபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர் மைதீன், நகர வர்த்தக சங்கத் தலைவர் முத்தையா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

  ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இசக்கியப்பன், சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், பக்தர்கள் பேரவை திருவள்ளுவர், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மோகன்தாஸ், நகர்மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் மருத சாமி பாண்டியன், கிருஷ்ணகுமார் ராஜகோபால், சசி முருகன், புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் ஆறுமுகசாமி செய்திருந்தார்.
  Next Story
  ×