என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பி.எட். கல்லூரி சாலையில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்து தொழில் செயய்பவர் செல்வராஜ் (வயது 65). இவரது மகன் கோகுல்ராஜ்(30).  தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி மது   குடித்து விட்டு  தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

  நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது குடித்து விட்டு வந்ததால், ஏன் இப்படி செய்கிறாய்? என செல்வராஜ் கேட்டார். இதனால் திடீரென கோகுல்ராஜ் அருகே இருக்கும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு சிமெண்ட் அட்டை போடப்பட்ட அறையில், ஆங்கிளில் பெட்ஷீட்டால் தூக்கு போட்டு தொங்கினார். 

  அவரது தாய் இதை பார்த்து அதிர்ச்சியில் சத்தம் போட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பெட்ஷீட்டை அறுத்து  உடலை கீழே இறக்கினர். பின்பு அவரை  குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  

  அங்கு அவரை  பரிசோத்தித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். அவரது உடல் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தனியார் ஆம்புலன்ஸ்கள் ஊர்வலமாக வந்தன.
  Next Story
  ×