என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  சாலையின் சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிப்பாளையத்தில் இன்று சாலையின் சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
  பள்ளிப்பாளையம்:

  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று அதிகாலை  ஈரோடு நோக்கி அரசு பேருந்தை டிரைவர் சாமிநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

  அதிகாலை சுமார் 5.30 மணிக்கு, பள்ளிப்பாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தபோது  டிரைவர்  கட்டுப்பாட்டை இழந்து பஸ், ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியா  முன்பு சாலையில் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது பஸ் பயங்கரமாக மோதி, அதில் ஏறி வேகமாக சென்று நின்றது.

  இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர்  உள்பட பேருந்தில் பயணம் செய்த 23 பயணிகள் எவ்வித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.  

  இதன்பின்னர் போக்குவரத்து மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை கிரேன் மூலம்  மீட்டனர்.
  Next Story
  ×