என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  ஒன்றிய ஆணையாளர்கள் 10 பேர் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியலூர் மாவட்டத்தில் 10 ஒன்றிய ஆணையாளர்கள் பல்வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
  அரியலூர்:

  அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

  அரியலூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு செந்துறை யூனியன் கமிஷனராகவும், செந்துறை யூனியன் கமிஷனர் சந்தானம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி அரியலூர் யூனியன் கமிஷ்னராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

  அரியலூர் யூனியன் கமிஷனர் அகிலா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் நாராயணன் ஆண்டிமடம் யூனியன் கமிஷனர் ஆகவும், ஆண்டிமடம் யூனியன் கமிஷனர் அருளப்பன் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி செந்துறை யூனியன் கமிஷ்னராகவும் இடமாற்றமாகி உள்ளனர்.
   
  செந்துறை யூனியன் கமிஷனர் அமிர்தலிங்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், தா.பழுர் யூனியன் கமிஷனர் ஜெயராஜ் திருமானூர் யூனியன் கமிஷனர் ஆகவும், திருமானூர் யூனியன் கமிஷனர் செந்தில்குமார் தா.பழுர் யூனியன் கமிஷனர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

  பணி இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் பயணப்படி கோரக்கூடாது, உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள். 

  இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×