search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூர்வாரும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளதை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு.
    X
    தூர்வாரும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுள்ளதை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு.

    2 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்று தூர்வாரும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்

    2 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் சென்று தூர்வாரும் பணியை விரைவாக முடிக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
    தஞ்சாவூர்:

    மேட்டூர் அணை முன்கூட்டியே அதாவது வருகிற 24-ந் தேதி திறக்கப்பட உள்ளது.  இதனால் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை விரைவாக முடிக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு பல்வேறு இடங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து விரைந்து தரமாக முடிக்க உத்தரவிட்டு வருகிறார்.

    அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை ஒன்றியம் நெற்குன்னம் ஊராட்சி மலையபுரம் வாய்க்கால், இரும்புதலை வடிகால், மணக்குடி வாய்க்கால், அகரமாங்குடி கிராமத்தில் உள்ள சுள்ளனார் வடிகால் தூர்வாரப்பட்டதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சேர்மாநல்லூர் கிராமம் சாமந்தன் காவிரி வடிகால் தூர்வாரும் பணியை பார்வையிடுவதற்காக கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் காரில் சென்றார். இந்த வடிகாலில் ஒரு இடத்தில் தூர்வாரும் பணி நடைபெற்றதை பார்வையிட்ட அவர், மற்றொரு இடத்தில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்க்க முயற்சி செய்தார்.
     
    ஆனால் அந்த இடத்திற்கு காரில் செல்ல முடியாது. இதனால் தனது பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் சத்தியராஜ் உதவியுடன் அதே கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் கலெக்டர் அமர்ந்து சென்று தூர்வாரும் பணியை பார்வையிட்டார். 
    மோட்டார் சைக்கிளை போலீஸ்காரர் ஓட்டி செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று தூர்வாரும் பணி முறையாக நடைபெற்றுள்ளதா? என பார்வையிட்ட கலெக்டரை விவசாயிகள் பாராட்டினர். 

    இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை வெண்ணாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் சத்யா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×