என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  மனைவி பிரிந்த ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனைவி பிரிந்த ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கொளத்தூர்:

  சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் ராஜா (34). ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு 12 வருடத்திற்கு முன்பு புளியந்தோப்பை சேர்ந்த ரேணுகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ராஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில நாட்களுக்கு முன்பு ரேணுகா புளியந்தோப்பில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மன உளைச்சலில் இருந்த ராஜா திரு.வி.க நகரில் உள்ள தந்தை சேகர் வீட்டிற்கு வந்துள்ளார். தந்தை வீட்டின் மின் விசிறியில் ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×