search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுவண்டி பந்தயம்
    X
    மாட்டுவண்டி பந்தயம்

    தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம்

    தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    அவனியாபுரம், 
    மே. 22-
    மதுரை கருப்பாயூரணி யில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில்  முதல்வர் மு.க.ஸ்டாலின்  69-வது  பிறந்த நாளை முன்னிட்டு  மாட்டு வண்டி பந்தயம் நடை பெற்றது. இந்த போட்டியை  அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி 26-ம், சின்ன மாட்டு வண்டி 47ம் என மொத்தம் 73 மாட்டு வண்டிகள்   கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டி 16 கிலோ மீட்டர் தூரமும், சின்ன மாட்டு வண்டி 12 கிலோ மீட்டர் தூரமும்   நிர்ணயிக்கப்பட்டது. 

    இதில் 41 நிமிடத்தில் அவனியாபுரம் எஸ்.கே. ஆர்.மோகனகுமாரசாமி   மாட்டு வண்டி முதலாவதாக வந்து ரூ.2 லட்சத்து 69-ஐ முதல் பரிசாக பெற்றது. கீழவளவு சக்தி அம்பலம் மாட்டு வண்டி 2-வதாக வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 69-ஐ  பரிசாக பெற்றது.  

    மாத்தூர் திரவியம் நினைவு சேரன் செங்குட்டு வன் மாட்டு வண்டி 3-வதாக வந்து ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 69-ஐ பெற்றது.  மதுரை மேலமடை சீமான் ராஜா   மாட்டு வண்டி 4-வதாக வந்து ரூ40 ஆயித்து 69-ஐ பெற்றது. 
    இதே போல் சின்ன மாட்டு வண்டி பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    இந்த  பந்தயத்தில் 47 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் 2 பிரிவுகளாக பிரித்து முதல் பிரிவில் 23 மாட்டு வண்டிகளும், 2-வது பிரிவில் 24 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. 12 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த  போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

    இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, வீரராகவன்,அழகு பாண்டி, திண்டியூர் குருசேகர்,நேரு பாண்டி, இளைஞரணி ராஜா, மாணவரணி மருது பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×