search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    கோடை விடுமுறையால் அதிகம் பேர் பயணம்: சென்னை-திருப்பதிக்கு 200 சிறப்பு பஸ்கள்

    ஆந்திர மாநில போக்குவரத்து துறை தமிழக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு கோடைகால சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.
    சென்னை:

    கோடை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருப்பதி-காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களுக்கும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்கிறார்கள்.

    இதனை கருத்தில்கொண்டு கோயம்பேட்டில் இருந்து திருப்பதி, நெல்லூர், காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழக போக்குவரத்துறை அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கி வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலத்தில் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து அதிகம் பேர் சுற்றுலா செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலுமாக குறைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்களை இயக்கி வருகிறோம். வார இறுதி நாட்களில் 20 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மக்கள் பயணம் செல்கிறார்கள் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோன்று ஆந்திர மாநில போக்குவரத்து துறையும் தமிழக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு கோடைகால சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தினமும் 150 சிறப்பு பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறை இன்னும் 2 அல்லது 3 வாரங்கள் வரை இருக்கும் என்பதால் அதுவரை சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



    Next Story
    ×