search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

    ‘மக்களுக்கு நீதி’ வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் ‘திராவிட மாடல்’ போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பணவீக்கத்தைக் குறைக்கும் வகையிலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பீட்டைக் குறைக்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலும், குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க நடவடிக்கை எடுத்து ‘மக்களுக்கு நீதி’ வழங்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் ‘திராவிட மாடல்’ போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    Next Story
    ×