search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லோன் மேளா
    X
    லோன் மேளா

    முத்ரா திட்ட லோன் மேளா

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் முத்ரா திட்ட லோன் மேளா வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர்மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிறு குறு உற்பத்தி சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம்வரை சொத்து பிணையம்  இல்லாமல் வங்கியில் முத்ரா திட்டத்தின் மூலம் கடன் பெறலாம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளச்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் பிரதான்  மந்திரி முத்ரா யோஜனா திட்டம். 

    இது குறுந்தொழில் மேம்பாட்டு  மற்றும் மறுநிதி நிறுவனம்    மூலமாக செயல்படுத்தபடுகிறது. இது அரசின் திட்டமாகும். இந்தியாவில் அனைத்து வங்கிகளின் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது.

    ரூ.10 லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள் தேசிய வங்கிகள் மட்டும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

    அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். உதாரணமாக  சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு முடிதிருந்தும் நிலையம் மேம்படுத்த பியூட்டி பார்லர் மேம்படுத்த மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், கோழிப் பண்ணை, மாடு வளர்த்தல் மீன் பண்ணை, தேனீ வளர்ந்தல், பால் பண்ணை,  பட்டு தொழில் பேக்கர் கடைகள் விரிவுப்படுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகளம் ஓட்டுபவர்,  கைவினை கலைஞர், உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

    ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு அந்த தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக  இருக்க கூடாது.

    கடன் பணமாக கிடைக்காது. பொருள், எந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என  அனைத்திற்கும்  அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும்.
    இதில் கடன்பெற உங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். மேலும்  PMMY APPLICATION FORM  என இணையத்தின் மூலமாகவும் உங்கள் வங்கிகளுக்கு ஏற்ப விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில்  மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் முத்ரா லோன் மேளா நடத்துவதாக மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வருகிற 25-ந் தேதி (புதன் கிழமை) அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வட்டார வளர்ச்சி (யூனியன்)அலுவலகங்களிலும் லோன் மேளா நடைபெற உள்ளது. 

    இதில் அனைத்து தொழில்முனைவோரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி முத்ரா கடன் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×