என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தை எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.
  X
  நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தை எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.

  தருமபுரி அருகே நல்லம்பள்ளி பேருந்து நிலையம் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்லம்பள்ளி பஸ்நிலையம் இன்று திறக்கப்பட்டது.
  தொப்பூர், 

  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 2017 ஆம் ஆண்டு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டன. அப்பொழுதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியவில்லை.

   பின்னர் மழை நீர் வடிகால் வசதி, சாக்கடை கால்வாய் வசதி,  நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு இணைப்பு  சாலை வசதி உள்ளிட்டவற்றிக்காக மீண்டும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

  சாலை பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து  இன்று பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன்  திறந்து வைத்தார். 

  அதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
  மேலும் செவ்வாய் கிழமை நாட்களில் இங்கு வாரச்சந்தை செயல்படுவதால் பேருந்துகள் அப்பகுதியில் நிற்காத  நிலை மாறி இருந்தது.

  இனி அனைத்து நாட்களிலும் வாரச்சந்தை பகுதியில் பேருந்து நிற்கும் என்பதால் பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஆர்.டி.ஓ. தாமோதரன், போக்குவரத்து பொது‌ மேலாளர் ஜீவரத்தினம், கிளை மேளாலர் செல்வராஜ், பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், சோனியாகாந்தி வெங்கடேசன், ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அறிவு மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×