என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
கூலி தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை
ஒத்தக்கடை, புதுதாமரைப்பட்டி, இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி சரண்யா உள்ளார்.
கார்த்திக்கிற்கு குடி பழக்கம் இருந்தது. எனவே குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனைவி சரண்யா, கணவருடன் கோபித்துக்கொண்டு வடக்குப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் நேற்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story