search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சிறப்பு ரெயிலில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து சென்ற காட்சி.
    X
    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சிறப்பு ரெயிலில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்து சென்ற காட்சி.

    சென்னை- பெங்களூர் வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு - மத்திய மந்திரி ஆய்வு

    சென்னை- பெங்களூர் வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதையொட்டி மத்திய மந்திரி ஆய்வு செய்தார்.
    ஜோலார்பேட்டை:

    சென்னை- பெங்களூரு, மார்க்கத்தில் ரெயில்கள் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக முக்கிய ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் தண்டவாளத்தை அதிகம் கடக்கும் பகுதிகள் கண்டறிந்து அப்பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டி சுவர் எழுப்பும் பணிகள் எல் சி கேட்டுகள் அகற்றி சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் உயர்நடை மேம்பாலும் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் தண்டவாளம் பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சென்னை -ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- பெங்களூர், ஜோலார்பேட்டை -சேலம் மார்க்கங்களில் பணிகள் நடந்து வருகிறது. 

    இப்பணிகளை ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். அதன்படி சென்னையில் இருந்து பெங்களூர் வரை அரக்கோணம் காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயிலில் சென்று ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வில் ரெயில்வே பாதைகள் ெரயில் நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கேட்டும், ரெயிலின் பின்புறம் கண்ணாடியின் வாயிலாக ரெயில் நிலையங்களையும், இருப்புப்பாதைகளையும் கண்காணித்து சென்றார். 

    இதையொட்டி சென்னை அரக்கோணம் காட்பாடி ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ெரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள–ப்பட்டிருந்தது. இப்பணிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில்:-

    சென்னை -பெங்களூரு மார்க்கத்தில் வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில் மார்க்கத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ரெயில் நிலையங்களில் நடைபெற்றது. 

    வரும் வளர்ச்சி திட்ட பணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார் என்றனர்.
    Next Story
    ×