search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனந்தலை சாலையில் உள்ள பூண்டி சாமியார் குளம் சீரமைக்கும் பணியை அமைச்சர் காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி  காட்சி
    X
    அனந்தலை சாலையில் உள்ள பூண்டி சாமியார் குளம் சீரமைக்கும் பணியை அமைச்சர் காந்தி பூமி பூஜை செய்து தொடங்கி காட்சி

    வாலாஜா பூண்டி சாமியார் குளம்– ரூ.1.37 கோடியில் சீரமைப்பு -அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

    வாலாஜா அனந்தலை சாலையில் உள்ள பூண்டி சாமியார் குளம்– ரூ.1.37 கோடியில் சீரமைப்பு பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி வார்டு 3 அனந்தலை சாலையிலுள்ள பூண்டி சாமியார் குளம் முட்புதர்கள் சூழப்பட்டு பராமரிப்பின்றி இருந்து வந்தது.

    இதனை சீர்படுத்திட கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 கீழ் ரூ.1.37கோடி மதிப்பீட்டில் குளத்தினை சீரமைக்கும் பணியினை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்றத் துணை தலைவர் கமலராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.1.37கோடி மதிப்பீட்டில் குளத்தினை சீரமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். 

    இந்த குளமானது 80 மீட்டர் நீளம் மற்றும் 80 மீட்டர் அகலம் கொண்ட குளத்தை சுற்றிலும் மண் கரைகள் சீரமைக்கப்பட்டு, கற்கள் பதியப்படுகின்றது. 

    குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு கழிவுகளை அகற்றி வெளியே கொட்டப்பட்டு குளத்தை சுற்றியும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. 

    இப்பணியில் கழிவறை, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு சாதனங்கள், விளக்குகள், சிசிடிவி கேமராக்கள், காவலர் கட்டடம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதனை முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி தலைவர் அவர்களுக்கு அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டார். 

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், நகர செயலாளர் தில்லை, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×