என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாட்டை கொன்ற ஒற்றை யானையையும், இறந்த காளை மாட்டையும் படத்தில் காணலாம்.
  X
  மாட்டை கொன்ற ஒற்றை யானையையும், இறந்த காளை மாட்டையும் படத்தில் காணலாம்.

  தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி ஜல்லிக்கட்டு காளை சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கியதில் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது.
  தேன்கனிக்கோட்டை, 

  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
  இதில் கோயில் திருவிழாக்களில் நடைபெறும்   எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதி களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். 

  இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு மாட்டை கட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கிராமத்தில் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்தது.

  அப்போது அங்கிருந்த காளை மாட்டை துதிக்கையால் தாக்கி தந்தத்தால்  குத்தியது.  இதில் காளை மாட்டின் குடல் சரிந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே காளைமாடு உயிரிழந்தது. 
  யானையின் பிளறல் சத்தத்தை கேட்டு கிராம மக்கள் வெளியே வந்து கூச்சலிட்டனர். கிராம மக்களை கண்டு ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. உயிரிழந்த காளைமாட்டை  கண்டு  குடும்பத்தினரும், கிராம மக்களும்கதறி அழுதனர். 

  இது குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாட்டை பார்வையிட்டனர்.
  பல லட்சம் மதிப்புள்ள காளை மாட்டை யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் இப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

   தொடர்ந்து அட்டகாசம் செய்துவரும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து வனத்துறையினா ஒரு குழு அமைத்து யானை கிராம பகுதிக்கு வராதவாறு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
  Next Story
  ×