என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கர்நாடகாவிற்கு 2 டன் ரேஷன்அரிசி கடத்த முயன்ற டிரைவர் கைது
கர்நாடகாவிற்கு 2 டன் ரேஷன்அரிசி கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரப்பம்ப ஸ் நிறுத்தம் அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அதிகாலை அந்த வழியாக வந்த சரக்கு வேனை மடக்கி சோதனையிட்டதில், 50 கிலோ அளவிலான, 40 மூட்டைகளில், 2 ஆயிரம் கிலோ ரேஷன்அ ரிசி கடத்தியது தெரிந்தது. வேனை ஓட்டி வந்த திருப்பத்தூர் மாவட்டம், சின்னபசலிக்குட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 30) என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசி, பிக்கப்வேனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் திருப்பத்தூர் பகுதியில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஜெயபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன், (27) ஸ்ரீ என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story