என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
  X
  ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

  ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
  குருபரப்பள்ளி,

  கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, பப்பாளி, தென்னை, பனை, நெல்லிக்காய், முருங்கை உள்ளிட்ட பழரக செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளும், உற்பத்தி செய்யப்பட்டுள்ள பழரகங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர்ஜெ யசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  பின்னர் அவர் கூறியதாவது:-
  ஜீனூர் தோட்டக்கலை பண்ணையில் மா மற்றும் இலந்தை பழத்தோட்டம் 72.70 ஹெக்டேர் பரப்பளவிலும், மா, கொய்யா, சப்போட்டா, புளி, சாதிமல்லி போன்ற நெருக்கு நடவு பயிர்கள் 7.80 ஹெக்டேர் பரப்பளவிலும், நாற்றங்கால் 1.645 ஹெக்டேர் பரப்பளவிலும், கட்டிடம் மற்றும் பாதை 5 ஹெக்டேர் பரப்பளவிலும், பாறை பகுதி 10 ஹெக்டேர் பரப்பளவிலும், சாகுபடி செய்யாத நிலம் 14.30 ஹெக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 123.445 ஹெக்டேர் பரப்பளவை கொண்டுள்ளது.

  இதில் மா ரகங்களாக பெங்களூரா, சேலம் பெங்களூரா, பீத்தர், இமாயுதீன், பனேசான், மல்கோவா, ரூமானி, செந்தூரா, காலப்பாடு ஆகியவை 72.30 ஹெக்டேர்ப ரப்பளவிலும், சீமை இலந்தை 0.40 ஹெக்டேர் பரப்பளவிலும் நடவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த தோட்டக்கலை பண்ணையில் 2021-22ம் ஆண்டிற்கு ரூ.53.716 லட்சம்ம திப்பில் விதைப்பு நாற்று மற்றும் ரூ.66.912 லட்சம் மதிப்பில் தாவரங்கள்உ ற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பண்ணையில் பழங்கள் மற்றும்கா ய்கறிகள் வீணாவதை தவிர்க்க ஜாம், ஜெல்லி மற்றும் ஸ்குவாஷ், ஊறுகாய்ஆ கியவற்றை உற்பத்தி செய்யும் வகையில், பழங்கள் மற்றும் காய்கறிகள்ப தப்படுத்தும் அலகு பிரிவு நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

  தொடர்ந்து ஜீனூர் கால்நடை கிளை மருந்தகத்தை கலெக்டர் ஆய்வு செய்து, கிளை மருந்தகத்தில் வைக்கப்பட்டுள்ள மருந்துகளின் இருப்பு மற்றும்கா ல்நடைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார்.

  இந்த ஆய்வின்போது, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, துணை இயக்குனர்ரா ம்பிரசாத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் சரவணன், ஜெனீபர், தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ், உதவி தோட்டக்கலை அலுவலர் வரதராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×