என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பூங்கா சீரமைப்பு பணிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டிய காட்சி.
  X
  பூங்கா சீரமைப்பு பணிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டிய காட்சி.

  ஆலங்குளம் பூங்கா சீரமைப்பு பணிகள்-தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குளத்தில் பூங்கா சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  ஆலங்குளம்:

  ஆலங்குளம் - தென்காசி பிரதான சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று உள்ளது. பல முறை நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டும் இது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    இங்குள்ள உபகரணங்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வீணாயின. ஆலங்குளத்தில் பொதுவான பொழுது போக்கு இடம் எதுவும் இல்லை என்பதால் இந்த பூங்காவை நல்ல முறையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

  இந்நிலையில் இந்த பூங்காவை சீரமைத்து புதிய வடிவமைப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட  15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். 

  ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் பூங்காவின் புதிய வடிவமைப்புக்கு அடிக்கல் நாட்டினார். 

  இதில் நகர தி.மு.க. செயலர் நெல்சன், ஒன்றிய கவுன்சிலர்கள் மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் ஆதித்தன், உதயராஜ், வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×