என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  நெல்லை அருகே சாலை விபத்தில் பூ வியாபாரி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை அருகே சாலை விபத்தில் பூ வியாபாரி பலியானார்.
  நெல்லை:

  பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 34).இவர் பூ வியாபாரம் செய்து வந்தார்.
   தினமும் பூக்களை தொடுத்து அவற்றை நெல்லை டவுன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று வீடு வீடாக விற்பனை செய்து வந்தார்.

  நேற்று அதிகாலை பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் அவர் சென்று கொண்டிருந்தார். சீதபற்பநல்லூர் அருகே உள்ள உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் கிடந்த மணல் குவியலில் மோட்டார் சைக்கிள் மோதியது.

  இதில் தடுமாறி கீழே விழுந்த மாரிமுத்து பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  அங்கு நேற்றிரவு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×