search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவிழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதையும், பக்தர்கள்  அம்மன்பெட்டி எடுத்து ஊர்வலமாக சென்றைத
    X
    திருவிழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதையும், பக்தர்கள் அம்மன்பெட்டி எடுத்து ஊர்வலமாக சென்றைத

    காளியம்மன் கோவில் திருவிழா

    வாடிப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு வளையல் காரர் தெருவில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. 

    விழாவையொட்டி முதல் நாள் மாலை 5மணிக்கு சரளைக்களம் மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலி லிருந்து பூந்தட்டு எடுத்து வந்தனர். 6 மணிக்கு பெண்கள் விளக்குபூஜைசெய்து  முளைப்பாரி வைத்து கும்மிபாடல் பாடினர். 2-ம்நாள் மாலை 5மணிக்கு பேட்டைபுதூர் கோவில் வீட்டிலிருந்து பெட்டியினை பூசாரிபொன்பாண்டி தலைமையில் எடுத்தும், அம்மன்அழைப்பிற்குபின் கரகம் ேஜாடிக்கப்பட்டு வீதிஉலா நடந்தது. 

    நள்ளிரவு 12 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரோஸ் கலர் புடவைை கட்டி அம்மன் ஊஞ்சலாட்டம் நடந்தது. 1 மணிக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். 3-ம் நாள் அதிகாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்புபூஜை செய்யப்பட்டது. மதியம் 11 மணிக்கு அன்னதானம் நடந்தது மாலை 5மணிக்கு பால்குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். 

    4-ம்நாளான  நேற்று காலை 11மணிக்கு அம்மன் பூஞ்சோலையடைந்தபின் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று பெருமாள்கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் கரைத்தனர். 

    அதன்பின் கோவில் வீட்டில் பெட்டி வைக்கப்ப ட்டு மஞ்சள் நீராட்டுநடந்தது.  இதன் ஏற்பாடுகளை வளை யல்கார தெரு பொதுமக்கள் மற்றும் காளியம்மன் கோவில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×