search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதை விவசாயி ஒருவர் காட்டும் காட்சி.
    X
    நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதை விவசாயி ஒருவர் காட்டும் காட்சி.

    தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது.
    திருப்பத்தூர் :

    திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் மற்றும் பருத்தி சோளம் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட தாலுகா பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நெல், பருத்தி, சோளம், உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தன. தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 50,ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளனர்.
     
    இதுகுறித்து ஆதியூர் விவசாயி கே.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது;-

    ஆதியூர் பகுதியில் உள்ள நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர் மழை காரணமாக வயல்வெளிகளில் நீர் தேங்கி நின்றது.

    இதனால் நெல் பயிர் அழுகியது. மேலும் தொடர் மழை காரணமாக அறுவடை செய்ய வேண்டிய பருத்தி, சோளம், அகியவை நீரில் மூழ்கி உள்ளது. விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நஷ்டஈடு வழங்க ஆவன செய்ய வேண்டும். எனக் கூறினார்.

    பல்வேறு இடங்களில் நெல், பருத்தி, சோளம், ஆகியவை நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×