search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    திருமணமான பெண்ணின் புகைபடத்தை பதிவிட்டு அவதூறு

    சமூக வலைதளத்தில் திருமணமான பெண்ணின் புகைபடத்தை பதிவிட்டு அவதூறு செய்ததாக தொண்டி பெண் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    கீழக்கரை

    கீழக்கரையில் 35 வயதுடைய பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இந்த பெண் உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். 

    அப்போது தொண்டி யைச் சேர்ந்த சபீனா என்பவர் அறிமுகமாகி தொடர்பை ஏற்ப டுத்திக்கொண்டு அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டுள்ளார். பின்பு குறிப்பிட்ட மொபைல் எண்ணில் இருந்து ரூ.50 ஆயிரம் பணம் கேட்டு சபீனா அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால்  அந்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படத்தையும் அவரது உறவினர்களின் பெயர்களுடன் இணைத்து பாலியல் தொழில் செய்வது போன்றும் சமூக ஊடகங்களில் பரப்புவேன்என சபீனா மிரட்டி வந்துள்ளார். 

    இது சம்மந்தமாக அந்த பெண் சபீனாவின் குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தி போலீஸ் நடவடிக்கைன எடுக்கப்போகிறோம் என்று கூறியவுடன் சபீனா மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கோரியதால் புகார் கொடுக்காமல் இருந்துள்ளார். 

    இந்த நிலையில் மீண்டும் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பாலியல் தொழில் செய்வது போன்ற வாசகங்களை உள்ளடக்கி அத்துடன் அந்த பெண்ணின் 2 புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியதுடன் பாலியல் தொழில் செய்து வருவதாகவும் மற்றவர்களும் இதில் சிக்கிவிடக்கூடாது என்று பதிவிட்டுள்ளார். 

    இது குறித்து  கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சபீனா மீது அந்த பெண் புகார் செய்தார், இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×