என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  வேலூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  வேலூர் :

  வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய தேசிய மாதர் சம்மேளனம் வேலூர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காவேரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சூரியா, பாத்திமா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட செயலாளர் சரோஜா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் லதா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். 

  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயுக்கான மானியத்துக்கு போதுமான நிதி ஒதுக்கி மானியத்தை முழுமையாக வழங்கிட வேண்டும். மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதி பாக்கிய உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது கோரிக்கையை வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
   
  மேலும் அவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×