search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    திருச்சியில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்க கோரிக்கை

    போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் திருச்சி மாநகரில் ஆம்னி பஸ் நிலையம் தனியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து நிலையம், ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் நடத்திவந்த பேருந்து நிலையத்திற்கு சரியான வாடகை தொகையை செலுத்தாத காரணத்தினால் ெரயில்வே தற்போது தனியார் ஆம்னி பஸ்களின் பேருந்து நிலையத்தை செயல்படவிடாமல் தடுத்துள்ளது.

    இதையடுத்து ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த விடாததால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலைகளில் ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து திருச்சியை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு தற்போது பேருந்து நிலையம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பேருந்துகள் இயங்குவதற்கு சரியாக பேருந்து நிலையங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் மட்டும் இன்னும் தேர் படுத்தப்படாமல் இருக்கின்றது. இதனால் தனியார் பேருந்துகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆம்னி பேருந்துகளின் எழுதுவதற்கு தனியாக பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.

    இதுபோன்று சாலைகளின் நடுவே ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகளும் அச்சமடைந்து வருகிறார்கள். இதனால் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் சற்று குறைந்து இருப்பதாகவும் தெரிகிறது.

    அதில் பணிபுரியும் டிரைவர், கிளீனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே எங்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் ஆம்னி பஸ்களுக்கு தனியாக பேருந்து நிலையம் உருவாக்கித் தரவேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    திருச்சி மாவட்டத்தில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆகவே இதையும் அந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும். மேலும் சாலைகளில் ஆம்னி பேருந்துகளின் நிறுத்துவதால் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதிக்கிறார்கள் இதுவும் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×