என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருச்சி பாலக்கரை அருகே அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
  X
  திருச்சி பாலக்கரை அருகே அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

  அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  திருச்சி:

  அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜனுல்லா மகது முன்னிலை வகித்தார்.

  மாநில தலைவர் காஜா முகைதீன், ஜாவித் உசைன், உசேன் செரிப் ஆகியோர் கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் நபர்கள் மாடு கடத்தியதாக அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு, மசூதி மற்றும் கோவில் ஒற்றுமையின் சின்னத்தை சிதைக்க பாடுபடும் முயற்சிகள் அனைத்தையும் தடுக்க வேண்டும். 

  மத உணர்வை தூண்டும் விதமாக இருக்கும் விஷயங்களில் நாட்டினுடைய தலையிடுவது நியாயமல்ல. பேரறிவாளனை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்திற்கும் முயற்சி எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

  அதேபோல் அப்பாவி சிறைவாசிகள் விஷயத்திலும் இதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  Next Story
  ×