search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசி பகுதி கோவில்களில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு

    தென்காசி பகுதி விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.
    தென்காசி:

    தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் விநாயகர் சன்னதியில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்கார தீபாராதனை பின்னர்  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தென்காசி தெற்கு மாசி வீதி கற்பக விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சதுர்த்தி வழிபாடு தொடங்கியது.  விநாயகருக்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு மோதகம் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை ஸ்ரீ பசி துஷ்டராய  கண்ட விநாயகர் கோவிலில் மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் விநாயகருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை, படைக்கப்பட்டு  சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .
    Next Story
    ×