search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்தப்படம்.
    X
    திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்தப்படம்.

    செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல்

    செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
    செங்கோட்டை:

    செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து உலக நன்மை வேண்டி பொதிகை ருத்ரா திருவாசக கமிட்டி சார்பில் திருவாசகம் முற்றோதுதல் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


    நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்தமருத்துவா் டாக்டா் கலா தலைமைதாங்கினார்.

    செங்கோட்டை அரசு ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவா் டாக்டா் ஹரிஹரன், சித்த மருத்துவா் டாக்டா் சிந்து ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

    தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் தென்காசி மாவட்டச்செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து சித்தமருத்துவா் டாக்டா் கலா ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கி பேசி பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

    பின்னா் கோவிலில் வீரகேரளவிநாயகா் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    தொடா்ந்து உலக நன்மை வேண்டியும் ஒைமக்ரான் நோய் தொற்று பரவாதிருக்க வேண்டியும் திருவாசகி சிவபகவதி குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.

    பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனா்.

    இதற்கான ஏற்பாடுகளை உழவாரப்பணி தொண்டா்கள் சிவன், சேகர், மாரியப்பன், வேல்முருகன், வள்ளிநாயகம், ராமகிருஷ்ணன், திருவாசக கமிட்டி நிர்வாகிகள் கருப்பசாமி, முத்துலெட்சுமி, முத்துசிவா ஆகியோர் செய்திருந்தனா்.

    முடிவில் கமிட்டி துணைச்செயலாளா் குருசாமி நன்றி கூறினார்.
    Next Story
    ×