search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உயர்மட்ட குழு அமைத்து அனைத்து குவாரிகளிலும் டிரோன் காமிரா மூலம் ஆய்வு செய்ய வேண்டும்-முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

    உயர்மட்ட குழு அமைத்து அனைத்து குவாரிகளிலும் டிரோன் காமிரா மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
    கடையம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடையத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தென்காசி மாவட்ட மக்கள் அச்சமின்றி சாலையில் நடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

     இந்த நிலை தொடர வேண்டும் என்றால் கேரள மாநிலத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.

    நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கனிம வளத்துறை அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    மற்ற துறைகளான வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து துறை, காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    அதுபோன்ற இன்னொரு விபத்து ஏற்படாத வகையில் தமிழக அரசு நேர்மையான அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து அனைத்து குவாரிகளிலும் டிரோன்  கேமரா மூலம் ஆய்வு செய்ய வேண்டும்.

    மேலும், சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு உடனடியாக தடை விதிப்பதற்கும், அதன் உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×