search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.
    X
    முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    ஆறுமுகநேரியில் மகளிருக்கான மருத்துவ முகாம்

    தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பொற்செல்வன், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரத்த அழுத்தம், இருதய நோய், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதில் 181 பெண்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.

    முகாம் ஏற்பாடுகளை ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் மெர்வினோ ஆகியோர் செய்து இருந்தனர்.

    திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சாமிநாதன், ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திகேயன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஏ.கே.எல்.கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நவநீதபாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×