என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
  X
  ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

  பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் சையத்பதோதீன், சின்னசாமி முன்னிலை வகித்தனர். 

  மாநில மகளிரணி இணை செயலாளர் இந்திராணி, மாவட்ட துணை தலைவர்கள் அருண்பிரசாத், அருணாசலம், மாவட்ட செயலாளர்கள் டாக்டர் மோகன், சுந்தர்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் மகேந்திரன், வசந்த், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  பின்னர் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறுகையில், உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்துள்ளது. பேரறிவாளன் தவிர்த்த மற்ற 6 பேர் விடுதலையை மத்திய, மாநில அரசுகள் தடுக்கவேண்டும். 

  அவர் குற்றமற்றவர் என்றோ, நிரபராதி என்றோ விடுதலை செய்யப்படவில்லை. சட்டத்தின்படி இது சரியென்றாலும், தர்மத்தின்படி தவறாகும் என தெரிவித்தார்.
  Next Story
  ×