என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  வத்தலக்குண்டு அருகே சூதாட்ட கும்பல் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வத்தலக்குண்டு அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புறநகர் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக எஸ்.பி சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் எஸ்.பி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சேக்தாவூது ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  கொடைக்கானல் சாலையில் பேக்கரிக்கு பின்புறம் உள்ளஓடையில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பணம் வைத்து சூதாட்டம் நடத்திய நத்தம் மார்க்கம்பட்டியை சேர்ந்த சாமிநாதன்(45), சின்னாளபட்டி நாகராஜ், பட்டிவீரன்பட்டி ராபர்ட், தேத்தாம்பட்டி சம்பத், செம்பட்டி சதீஸ்குமார், தியாகராஜன், விராலிமலையை சேர்ந்த சின்னமூர்த்தி, குணா, அய்யம்பாளையத்தை சேர்ந்த சிவா ஆகிய 9 பேர்களை கைது செய்தனர்.

  அவர்களிடமிருந்து ரூ.93120 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். பிடிபட்ட அனைவரையும் வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர்.

  இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிஓடிய கொட்டபட்டியை சேர்ந்த நாகநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×