என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஜி.கே.மணி
  X
  ஜி.கே.மணி

  சென்னையில் 28-ந்தேதி பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார்.
  சென்னை:

  பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ந் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

  இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

  இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

  சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

  Next Story
  ×