என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
  பெருந்துறை:

  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (71) விவசாயி. இவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

  சென்னியப்பன் தனது தோட்டத்தில் பல இடங்களில் ஆழ்துளை கிணறு போட்டுள்ளார். ஆனால் ஒரு ஆழ்துளை கிணறில் கூட தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.

  பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் போட்டும் தண்ணீர் வரவில்லை என்று கூறி புலம்பி வந்தார். சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்த சென்னியப்பன் தென்னை மரத்திற்கு வைக்கும் சல்பாஸ் விஷ மாத்திரையை பழத்தில் வைத்து சாப்பிட்டார்.

  பின்னர் இதுகுறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் சென்னியப்பனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி சென்னியப்பன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×