என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  கனிம வளத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கனிம வளத்தை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  குமாரபாளையம்: 

  குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் மினரல் என்டர்பிரைசஸ் குவாரியில் அனுமதி இல்லாமல் ஜே.பி.பி. எந்திரம் மூலம் கல் வெட்டி எடுப்பதாக  வருவாய் ஆய்வாளர்  விஜய்க்கு தகவல் கிடைத்தது. 

  இதையடுத்து நேற்று முன்தினம் மாலையில்  நேரில் சென்று பார்த்த போது,  அங்கு டிரைவர்கள் 2 பேர் கல் வெட்டி எடுத்துக்கொண்டிருந்தனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய் ஆய்வாளர் விஜய், அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தார். 

  மேலும்   ஜே.சி.பி. எந்திரம்,  டிப்பர் லாரி ஆகிய–வற்றை  பறிமுதல் செய்து, குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். மேலும் குவாரி உரிமை–யாளர் மீதும்  நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் ஆய்வாளர் புகார் கொடுத்தார்.


  இவரது புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, லாரி  டிரைவர்களான  திருச்செங்கோடு, கோழிக்கால்நத்தம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது  43), எடப்பாடி முனியன் வளவு பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
  Next Story
  ×