search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    வெளிநாட்டில் வேலை என கூறி என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி

    வெளிநாட்டில் வேலை என கூறி கும்பகோணம் என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநறையூர் உமர் நகரை சேர்ந்தவர் முகமது நபில் (வயது 26). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தார். 

    அப்போது சமூக வலைதளமான இண்டஸ் கிராமில் ஐக்கிய அரபு நாட்டில் வேலை உள்ளது என்று ஒரு விளம்பரம் பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் பக்கத்தை கிளிக் செய்து முகம்மதுநபில் பார்த்தார்.

    அதில் தொடர்புடைய பக்கத்தில் முகமது நபில் தனது தகவல்களைப் பரிமாறிக் கொண்டார். இந்த தகவல் பரிமாற்றம் முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே நடந்து கொண்டிருந்தது. 

    அப்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வேலை வேண்டும் என்றால் இண்டர்வியூ கட்டணம், விசா கட்டணம், விமான கட்டணம் உள்ளிட்ட வைகளை செலுத்த வேண்டும் என அந்த வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக 30  வங்கிக் கணக்குகளும் கொடுக்க ப்பட்டு இருந்தது. 

    இதையடுத்து முகமது நபில் அந்த வங்கி கணக்குகளில் கடந்த மாதம் 15-ந் தேதி வரை பல தவணைகளாக ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 600 செலுத்தியிருந்தார். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட இணையதள பக்கத்தில் இருந்து வேலை தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த முகமதுநபில் ஆன்லைனில் குறுந்தகவல் அனுப்பினார். அதற்கு எந்த ஒரு பதிலும் திரும்பி வரவில்லை. பலமுறை முயன்றும் பதில் கிடைக்காததால் தான் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுவாமிநாதன், இன்ஸ்பெ க்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×