search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கு விற்பனை

    மதுரை உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    மதுரை

    மதுரை மார்க்கெட்டு களில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளா கியுள்ளனர்.

    மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் வெகு வாகக் குறைந்துள்ளதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி மதுரைக்கு அதிக அளவில் கொண்டுவரப்படுகின்றன. ஆனாலும் பற்றாக்குறை காரணமாக தக்காளியின் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மதுரையில் வெளி மார்க்கெட்டுகளில் நாட்டு தக்காளி 100 ரூபாயை தொட்ட நிலையில் உருட்டு மற்றும் வெளிமாநில தக்காளிகள் விலை வெளி மார்க்கெட்டுகளில் 90 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ஆனால் மதுரையில் உள்ள அண்ணாநகர், பழங்காநத்தம், ஆனையூர், பீ.பி.குளம் உழவர் சந்தைகளில் இன்றைக்கு தக்காளி கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது‌ இதனால் உழவர் சந்தைகளில் தக்காளியை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    சராசரியாக 30 ரூபாய்க்கு இதனால் மார்க்கெட்டுகளில் மிளகாய் குவியல் குவியலாக காணப்படுகின்றன. மேலும் நாட்டுக் காய்கறிகள், மலைக் காய்கறிகள் வழக்கமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது‌.
    Next Story
    ×