search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சாலை விரிவாக்க பணிக்கு பின் மீண்டும் புளியமரம் நட மக்கள் கோரிக்கை

    நன்னிலம் பகுதியில் சாலை விரிவாக்கபணி முடிவடைந்த பின் மீண்டும் புளியமரம் நட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளளர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் தற்போது நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகிறது. இதற்கு இடையூறாக உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. 45-50 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் இருமருங்கிலும் நம் முன்னோர்கள் புளிய மரங்களை நட்டு வந்தனர்.

    புளிய மரம் என்பது ஒலி மாசு கட்டுப்படுத்தக்கூடியது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் எழுப்பக்கூடிய ஒலியை வெகு தூரங்களுக்கு செல்லாமல் கட்டுப்படுத்தும் ஆற்றல் புளிய மரங்களுக்கு உண்டு. அதனடிப்படையில் நம் முன்னோர்கள் சாலையி ன் இரு மருங்கிலும் புளிய மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். புளியமரம் பல்வேறு வகைகளில் நிர்வாகத்திற்கு பயனளிக்கக்கூடியவகையில் இருந்துள்ளது.

    சாலைசிதலம் அடையாமல் பாதுகாப்பது, மழை காலங்களில் சாலை களில் அரிப்பு ஏற்படாமல் தடுக்க செய்வது, உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளுக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் புளியமர குத்தகை மூலம் வருமானம் ஈட்ட முடிந்தது.தற்போது சாலை விரிவாக்கப் பணிகளுக்கு பின், சாலையோரங்களில் அகற்றப்பட்ட புளியமரங்க ளுக்கு பதிலாக, வேறு வகையான மரங்கள் நடப்பட்டு வருகிறது. அவை குறுகியகால ஆயுள் கொண்ட மரங்களாகும், இயற்கை சீற்றங்களில் எளிதில் பாதிக்கக்கூடிய மரங்களாகவும் உள்ளன.

    எனவே நெடுஞ்சாலை த்துறையினர் நமது முன்னோர்கள் கையாண்ட வழிமுறைகளை பின்பற்றி, சாலைகளில் அகற்றப்பட்ட புளிய மரங்களுக்கு பதிலாக, பணிகள் முடிந்த பின்பு மீண்டும் புளிய மரங்களை நடுவதால், ஒலி மாசு கட்டுப்படுத்துவதோடு, சாலையில் நிழல் தருவது, மழைநீர் களால் சாலையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகா ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Next Story
    ×