என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கண்காட்சியில் கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்
  X
  கண்காட்சியில் கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்

  தென்காசி கண்காட்சியில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம் நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் பொதுமக்களை கவரும் வகையில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  தென்காசி:

  தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவில் பொதுமக்களை கவரும் வகையில் வில்லிசை, ஒயிலாட்டம், பரதநாட்டியம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  சிவகாசி கலைச்சுடர் மணி பால்ராஜ்  குழுவினரின்  ஒயிலாட்டம் மற்றும் சக்கை குச்சி ஆட்டத்தின் மூலம் பணி விளக்கக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து எளிமையான முறையில் வந்திருந்த பார்வையாளர்களுக்கு  கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.

  தொடர்ந்து பாரதியார் பாடல்களுக்கான புருஷோத்தமன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்  இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
  Next Story
  ×