என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சாத்தான்குளம் அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்- வாலிபருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  சாத்தான்குளம்:

  சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.   பஸ்சை நெல்லை அருகே உள்ள சங்கர்நகரை சேர்ந்த சுந்தரபாண்டி (வயது 37) என்பவர் ஓட்டி சென்றார்.    அப்போது ேமாட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பஸ்சில் மோதுவது போல் வந்தார்.
   
  இதனைப் பார்த்த சுந்தரபாண்டி பஸ்சை நிறுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை  கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆத்திரமடைந்த வாலிபர், சுந்தரபாண்டியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.  

  இதில் காயமடைந்த  சுந்தரபாண்டி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  டிரைவரை தாக்கிய வாலிபரை தேடி வருகிறார்.
  Next Story
  ×