என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொலை
  X
  கொலை

  மதுகுடிக்க பணம் தராததால் அண்ணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற தம்பி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிபட்டி அருகே மதுகுடிக்க பணம் தராததால் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஆண்டிபட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம்தாஸ்நகரை சேர்ந்த அன்பழகன் மகன் வசந்தகுமார்(18). இவருக்கு 16 வயதில் ஒரு தம்பி உள்ளார். தாய் இறந்துவிட்ட நிலையில் தந்தையும் வெளியூர் சென்றுவிட்டதால் தனது பாட்டி பழனியம்மாள் வீட்டில் தங்கியிருந்தனர்.

  வசந்தகுமார் பால் கறக்கும் வேலை பார்த்து வந்தார். அவரது தம்பி பள்ளிக்கும் செல்லாமல், வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். மேலும் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி தனது பாட்டி மற்றும் தனது அண்ணனிடம் பணம் வாங்கி மதுகுடித்து வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் தனது பாட்டியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். அவர் இல்லை என்று சொன்னதால் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை வசந்தகுமார் தட்டிகேட்டு தனது தம்பியை கண்டித்தார்.

  அதன்பின்பு வசந்தகுமார் தனது அறையில் தூங்கசென்றுவிட்டார். பின்னர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது தம்பி தனது அண்ணன் வசந்தகுமார் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். மேலும் அரிவாள்மனையால் அவரது உடலை அறுத்துள்ளார். வசந்தகுமாரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.

  ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த அவரை பார்த்து கதறிஅழுதனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×