search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. அருகில் ஆணையாளர் கார்த்திகேயன், து
    X
    மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. அருகில் ஆணையாளர் கார்த்திகேயன், து

    மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம்

    மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் இன்று மேயர் தலைமையில் நடந்தது.
    மதுரை

    மதுரை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். 

    முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சோலை ராஜா தலைமையில் மாமன்ற அரங்கிற்குள் வந்தனர் அதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., பா ஜனதா கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க கவுன்சில ர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர் இதனால் சரியாக காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் மேயர் இந்திராணி பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தார். இந்த தீர்மானங்கள் அனைத்தும் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

    குறிப்பாக அனுப்பானடி மாநகராட்சி பள்ளிக்கு ரூ. 92 லட்சம் செலவில் புதிய கட்டிடம் மற்றும் பொது சுகாதார பிரிவில் 530 ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் 2289 தூய்மைப் பணியாளர்கள் 60 மருத்துவமனை பணி யாளர்கள் நியமிப்பதற்கான திட்ட மதிப்பீடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    மேலும் 100 வார்டுக ளிலும் திடக்கழிவு சேகரிப்பு பணிக்கென 140 வாகன ஓட்டுனர்களை நியமிப்பது தொடர்பான திட்ட மதிப்பீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் 100 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்கு 52 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப் படுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ 99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீட்டுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது . இதையடுத்து கவுன்சிலர்கள் வார்டு பிரச்சினைகளை குறித்து பேசினார்.

    வாசுகி (திமுக):- எங்கள் பகுதி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியாகும். ஏற்கனவே கிராம ஊராட்சி பகுதிகளாக இருந்த பகுதி தற்போது பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் மோசமாகி விட்டது. தற்போது மழை காலங்களில் அந்த பகுதியில் நடக்க முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன. எனவே அந்த விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையாளர் கார்த்திகேயன்:- இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரவிச்சந்திரன் (கல்வி குழு தலைவர்): மாநக ராட்சி வார்டுகளில் பல்வேறு இடங்களில் பணியாளர்களுக்கு தேவையான வாகன வசதிகள் இல்லாததால் பணியாளர்கள் ஆங்காங்கே ரோடுகளில் நிற்கும் சூழ்நிலை உள்ளது. எனவே பணியாளருக்கு தேவையான டிராக்டர் மற்றும் குப்பை வண்டிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். பசுமலை பகுதியில் 

    தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் ஒவ்வொரு பெயரில் நகரை உருவாக்கி வருகிறார்கள். இதனால் பசுமலை என்ற ஊரின் பெருமை குறைந்து வருகிறது. எனவே இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையாளர்:- மாநகராட்சி மூலம் கட்டிட வரைபட அனுமதி வழங்கும்போது அந்தந்த வார்டு எண்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் சிலர் போலி யான பெயர்களை அந்தந்த பகுதிகளில் வைத்து விடுகிறார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும்.

    சோலைராஜா (அ.தி.மு.க. குழு தலைவர்): கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்பில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையாளர்:- கடந்த காலங்களில் இந்த திட்டத்திற்கான நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை ஆகியவற்றி டமிருந்து அனுமதி பெறாமல் இருந்தது. 

    தற்போது இந்த  துறைகளில் இருந்து உரிய அனுமதியை பெற்று பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. குடிநீரை சுத்திகரிக்கும் பண்ணைப்பட்டியில் 25 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சோலை ராஜா:- தற்போது கவுன்சிலர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 3 லட்சமும் மண்டல அலுவலகங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. 24 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த அ.தி.மு.க. நிர்வாகத்தின் போது கவுன்சிலர்களுக்கு ரூ. 5 லட்சம் சிறப்பு நிதி  வழங்கப்பட்டது. அதனால் தற்போது அந்த நிதி குறைக்கப்பட்டுள்ளதால் வார்டுகளில் மக்கள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் சிறப்பு நிதியாக ரூ. 10 லட்சமும் மண்டலங்களுக்கு ரூ. 50 லட்சமும் நிதி வழங்க வேண்டும்.

    ஆணையாளர்:- இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

    சோலை ராஜா:-  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன. சில பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதில் சில மாறுபாடுகள் காண ப்படுகிறது. இதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையாளர்:-  ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நடைபெற்ற பணிகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்தனர்.
    இதற்கு ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் மேயர் இந்திராணி பதில் அளித்தனர்.

    முன்னதாக அ.தி.மு.க. மாமன்ற குழுத்தலைவர் சோலை ராஜா கூறியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு தி.மு.க. என்றுமே எதிரிதான். மாமன்ற கூட்டத்தில் எங்களுக்கான இருக்கை வேண்டும் என்ற எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் 3 மாத காலம் அவகாசம் கேட்டு சுற்றறிக்கை விட்ட மேயரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் ஆகிய நாங்கள் அமைதி வழியில் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச பட்ஜெட் விவாத கூட்டத்தில் கலந்து கொண்டோம்

    எங்களுக்கான இருக்கைகள் பின்புறம் இருந்தாலும் மக்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி கூட்டம் இன்று நடந்த நிலையில் மாநகராட்சியின் பிரதான வாயில் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள வாசல்கள் அடைக்கப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டனர். இதனால் மாநகராட்சிக்குள் பொது மக்கள் செல்லவும் கடும் சிரமம் ஏற்பட்டது.
    Next Story
    ×