என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  ஷேர் மார்க்கெட் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் ஷேர் மார்க்கெட் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
  தஞ்சாவூர்:

  தஞ்சை மானம்புச்சாவடி சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 57). இவர் தஞ்சையில்  உள்ள ஒரு ஷேர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கீழவாசல்  வாடிவாசல் கடைத்தெருவில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் திடீரென சிவக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

  இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து சிவகுமார் மனைவி வாசுகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மனம் உடைந்து சிவகுமார் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×