என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  ஒகேனக்கல்லில் செல்பி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒகேனக்கல்லில் செல்பி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து பலியானார்.
  பென்னாகரம், 

  தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். பெயிண்ட் கடை உரிமையாளரான இவருடைய மனைவி சுமதி (வயது 35). இவர்கள் நேற்று குடும்பத்தினருடன் ஒகேனக்கல் சென்றுள்ளனர். 

  ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் பரிசல் மூலம் ஐந்தருவி பகுதிக்கு சென்றனர். பார்வை கோபுரம் அருகே பாறையில் நின்றவாறு ஐந்தருவியை செல்பி எடுக்க சுமதி முயன்றுள்ளார். 

  அப்போது எதிர்பாராதவிதமாக சுமதி பாறை வழுக்கி காவிரி ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்து உறவினர்கள் சத்தம் போட்டனர். காவிரி ஆற்றில் பரிசலில் சென்ற பரிசல் ஓட்டிகள் சுமதியை மீட்டனர். 

  உடனடியாக அவரை ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சுமதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
  இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செல்பி எடுக்க முயன்ற போது பெண் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×