என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  ஓமலூர் அருகே வாலிபருக்கு வெட்டு- கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்த ஓமலூர் போலீசார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓமலூர் அருகே கத்தியால் வாலிபரை வெட்டியவர்கள் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்தனர்.
  ஓமலூர்:

  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 35).

  இவருடைய நண்பர்  மகேந்திரன் என்பவர்  குடிபோதையில்  தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது பாக்கெட்டில் இருந்த 9 ஆயிரம் பணத்தை காமலாபுரம் பிரிவில் காய்கறி கடை நடத்தி வரும் தங்கம் என்பவரது மகன் வேலுமணி எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து செல்வம், வேலுமணியின் கடைக்குச் சென்று பணத்தை திருப்பி கேட்டபோது வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து வேலுமணியின் தம்பி சக்தி, அவரது தந்தை தங்கம் ஆகியோர் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர்.   

  இருப்பினும்  சம்பவத்தன்று  செல்வம் மீண்டும் தனது மனைவியுடன்  சென்று பணத்தை கேட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால்  செல்வத்தின் கையிலும், காலிலும் கத்தியால் வெட்டினார்கள். இதில்  படுகாயமடைந்த செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுகுறித்து ஓமலூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×