என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    விவசாயியை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கபிஸ்தலம் அருகே விவசாயியை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேரை போலீசார் கைது ெசய்தனர்.
    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 32) விவசாயி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தேவி கணவரிடம் கோபித்து கொண்டு அதே ஊரில் வசிக்கும் வீரையன் என்பவருடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. 

    இதனால் மனமுடைந்த சங்கர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் இறந்தார்.

    இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சங்கர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் மணலூர் காணி இருப்புத் தெருவில் வசித்து வரும் தனது மாமனார் பக்கிரிசாமி மகன் பாண்டியன் (52), வெண்ணிலா, மைத்துனர் செல்வம் (24) மற்றும் எதிர்வீட்டில் வசித்து வந்த அருண் (35) ஆகிய நான்கு பேரும் தான். 

    இவர்கள் என்னை அவதூ றாக பேசினர். இதனால் தான் தற்கொலை செய்தேன் என குறிப்பிடபட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டி யதாக வழக்குப்பதிவு செய்து பாண்டியன், வெண்ணிலா, செல்வம், அருண் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×