என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் காத்த
  X
  குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் காத்த

  குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்ககோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை அருகே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  நாகப்பட்டினம்:

  நாகை மாவட்டம் நீண்ட நெடிய கடற்கரையை கொண்ட மாவட்டமாகும். மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீர் உவரி நீர் என்பதால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை மட்டுமே நம்பி நீர் ஆதாரம் உள்ளது. கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 27 கிராமங்களில் நிலத்தடி நீர் 7 கிராமங்களில் மட்டுமே உள்ளது. எஞ்சிய 20 கிராமங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மட்டுமே குடிநீர் வாழ்வாதாரமாக திகழ்கிறது. 

  இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் குடிநீர் நீர்மட்டம் 30 அடியில் கிடைத்த குடிநீர் தற்போது 60 அடியை தாண்டிச் சென்றுவிட்டது.இதனால் நாள் ஒன்றுக்கு 22 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்து வந்த நிலையில் தற்போது நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இது ஒருபுறமிருக்க கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 100 கிராமங்களில் மட்டுமே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 93 கிராமங்கள் சேர்க்கப்பட்டு 193 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் எந்த கிராமங்களுக்கும் முழுமையாக தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் கொள்ளிடத்தில் இருந்து கோடியக்கரை வரை சுமார் 110 தரை தல குடிநீர் தேக்க தொட்டி மூலமாக குடிநீர் விநியோகம் செய்து வரும் நிலையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் குடிநீரை கொண்டு செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள மின் ஊக்கிகளும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. 

  இதன் காரணமாக கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்கண்ணி, சோழவித்தியா புரம், மீனம்மநல்லூர், திருமணங்குடி, சின்னதும்பூர் தாழையாமலை உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் இருசக்கர வாகனங்களில் பல கிலோமீட்டர் தூரம் சென்று ஆண்கள் மற்றும் பெண்கள் குடிநீருக்காக காத்து நிற்கும் அவலம் தொடர்கிறது. ஊராட்சி சார்பில் வழங்கப்படும் நீரை சமைத்தால் குடிப்பதற்கும் சுவையற்று மோசமான நிலையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள் காலி குடங்களுடன் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் குடிநீருக்காக 10,000 கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் கஷ்டத்தை போக்கும் வகையில் ஓராண்டுகளாக வேளாங்கண்ணி சேர்ந்த உதவிகரங்கள் தன்னார்வ அமைப்பு இப்பகுதி மக்களுக்கு இலவசமாக 2 டேங்கர் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உதவிகரங்கள் அமைப்பின் நிறுவனர் ஜெயராஜ் கூறும்போது:-

  கொரோனாகாலக ட்டத்தில் இக்கிராம ங்கங்களுக்கு உணவு அளிக்க சென்றபோது உணவை விட தண்ணீர் தான் முக்கியம் என்பதை அறிந்து கொண்டேன். குளத்து தண்ணீரை பயன்படுத்தி நோய் தொற்று ஏற்படுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

  Next Story
  ×