என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமாவளவன்
  X
  திருமாவளவன்

  ரஷியா மாநாட்டில் பங்கேற்க திருமாவளவன் இன்று பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியா நாட்டின் ககான் மாநிலத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று புறப்படுகிறார்.
  சென்னை:

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கோவாவில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு பேசினார். 2 நாட்கள் அங்கு தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் வருகிற 20-ந்தேதி ரஷியாவில் ஒரு மாநாட்டில் பங்கேற்கிறார்.

  ககான் நகரில் நடைபெறும் உலக ஹலால் தினம் நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்க வேண்டும் என அந்த அரசு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று சிறப்பு விருந்தினராக அவ்விழாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.

  அதனைத்தொடர்ந்து ரஷியா நாட்டின் ககான் மாநிலத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள திருமாவளவன் இன்று புறப்படுகிறார்.

  சென்னையில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் துபாய் சென்று அங்கு இருந்து மாஸ்கோ நகருக்கு நாளை செல்கிறார்.

  ககான் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் திருமாவளவனை வரவேற்று அழைத்து செல்கின்றனர். அங்குள்ள தமிழர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் 22ந்தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். திருமாவளவனுடன் அவரின் தனி செயலாளர் தயாளன் செல்கிறார்.

  Next Story
  ×